search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயம் பாதிப்பு"

    • 10 நாட்களுக்கு முன்பு நிலத்தை உழுது நெல் பயிர் நடவு செய்துள்ளனர்.
    • விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அணை அருகே ஏராளமான விவசாயிகள் பல்வேறு வகையான விவசாயம் செய்து வருகின்றனர். இதில் சரவணன், பெருமாள் என்ற விவசாயிகள், தொடர் மழையால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிலத்தை உழுது நெல் பயிர் நடவு செய்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சரவணன், பெருமாள் விவசாயிகளின் ஒரு சில வயல்களில் தண்ணீர் இருந்தும், பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் பயிர்களை பிடுங்கி எடுத்து, உரக்கடைகளில் புகார் தெரிவித்துள்ளனர். அப்பொழுது அந்த பயிர்களை தண்ணீரில் வைத்து பார்த்த உரக்கடையினர், வேர் பிடிப்பதாகவும், அதற்கு மாற்று உரத்தினை வழங்கி உள்ளனர். இதனை தெளித்தால் பயிர்கள் உயிர்ப்பிக்கும் என தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அவர்கள் தெரிவித்தது போலவே விவசாயிகள் வயலில் உரத்தினை தெளித்து தண்ணீர் பாய்த்து உள்ளனர். ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், தொடர்ந்து பயிர்கள் முழுவதுமாக காய்ந்து கருகி வருகிறது. இது அனைத்து வயல்களும் இல்லாமல் குறிப்பிட்ட சில வயல்களில் கடந்த 5 ஆண்டுகளாக பயிரிடக்கூடிய பயிர்கள் பாதியிலேயே காய்ந்து கருகி வருகிறது.

    இந்த வயல்களில் பயிரிடப்படுகின்ற கருப்பு, நெல் இது போன்ற பயிர்கள் காய்ந்து கருகி விடுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் என்ன காரணம் என்று தெரியாமல், பயிர்கள் காய்ந்து வருவதால், ஆண்டுதோறும் இந்த வயல்களில் பயிர்களை விவசாயம் செய்யும் நிலையில், ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே வேளாண் துறை அதிகாரிகள் இந்த வயல்களை நேரில் ஆய்வு செய்து மண்ணை பரிசோதனைக்கு உட்படுத்தி, பயிர்கள் காய்வதற்கான காரணத்தை தெரியப்படுத்தினால், அதனை சரி செய்வதற்கு வசதியாக இருக்கும். அதேபோல் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு வகையில் நஷ்டம் அடைந்து வரும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×